திருப்பூர்:பெரல் பேஷன் ஆஃப் இந்தியா சார்பில் பெரல் ஐகான் ஆஃப் இந்தியா 2025 என்கிற சிறப்பு அழகு போட்டி திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந் நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாடலிங் துறையை சார்ந்த இளம் பெண்கள் மற்றும் ஆடவர்கள் கலந்து கொண்டனர்.
கண்கவர் வண்ண வண்ண உடைகளில், சிறப்புமிக்க ஆடை அலங்காரங்களோடு ரேம்போ வாக் செய்து அசத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அழகு கலை சார்ந்த நிபுணர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் Miss India 2025 ஆம் ஆண்டுக்கான Miss Title winner, pearl icon of India விருது Miss.அம்ருத்( Amruth) அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.