மதுரை: சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் 1262 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் மதுரை, செந்தமிழ் கல்லூரியில் தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு கல்லூரியின் இளஞ்செஞ்சிலுவை சங்கம் இணைந்து கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ராணி லக்குமி குமரன் சேதுபதி அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் பேராசிரியரும் இளஞ்செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர்
சுப்புலெட்சுமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் சாந்தி தேவி மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தார்கள்.

சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் நிறுவனத்தலைவரும், சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்க பட்டயத்தலைவரும், கண்தான மாவட்டத் தலைவரும், உலக சாதனையாளருமான அரிமா டாக்டர் ஜே. கணேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து விரிவான சிறப்புரையாற்றினார். கண்தானம் பற்றிய குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

மேலும் டாக்டர் ஜே. கணேஷ் அவர்கள் கூறுகையில், அகத்துக்கு அழகு அளிப்பவை மட்டுமல்ல கண்கள் உலகத்தை நாம் காண உதவும் அற்புத உறுப்பு. கண்கள் இல்லாத வாழ்க்கை ஓர் இருண்ட உலகம் இத்தகைய இருண்ட உலகில் வாழ்பவர்களுக்கு ஒளி விளக்காக கிடைத்தது தான் கண்தானம். மனிதர்களுக்கு மரணம் உண்டு. ஆனால் கண்களுக்கு மரணம் இல்லை. எனவே மரணத்திற்கு பின்பு அனைவரும் கண்தானம் செய்யலாம். சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்காக உயர்த்த முடியும் என்றார். ஒருவர் கண்தானம் வழங்கினால் நான்கு நபர்கள் பார்வை பெற முடியும் என்றும் கூறினார். கண்தானத்திற்கு பரிந்து வைக்க தேவையில்லை என்றும் உறவினர்கள் சம்மதம் இருந்தால் கண்தானம் வழங்கலாம். கண்தானம் பெறுவதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும்,உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்திலும் உள்ளது. இதற்கு மாணவ மாணவிகளின் பங்கு அதிகமாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் உடல் உறுப்பு தானம் பற்றி அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் விபத்துக்களால் இறக்கின்றனர். அவர்களின் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுக்கு உயிர் கொடுக்கின்றனர்.
சிறுநீரகம்,
நுரையீரல், கல்லீரல், குடல் போன்ற உறுப்புக்களை நாம் உயிருடன் இருக்கும் போதே தானம் செய்யலாம். பெரும்பாலனவை 6 முதல் 72 மணிநேரத்திற்குள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. ஒரு நன்கொடையாளர் குறைந்தது. எட்டு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் உறுப்புதானம் என்பது மனிதர்களிடமிருந்து ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் உறுப்புகள் பிரித்தெடுக்கப்படும் ஒரு செயல்முறையாகும். பின்னர் இந்த உறுப்புகள் நன்கொடையாளர் உயிருடன் இருக்கும் போது அல்லது நன்கொடையாளரின் குடும்பத்தின் அனுமதியுடன் இறந்த நிலையில், சட்டபூர்வமாக மற்றொரு தேவையுள்ள நபருக்கு மாற்றப்படும். உடல் உறுப்புதானம் மூலம் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
உறுப்பு
தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைச் செய்ய மக்களை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி உலக உறுப்புதான தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.

கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த மதுரை, செந்தமிழ் கல்லூரியின் 6000 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த கருத்தரங்கில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு நோட்டீஸ்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இம் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை மதுரை, செந்தமிழ் கல்லூரியின் மாணவ – மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இறுதியில் கல்லூரியின் துணை பேராசிரியர் முனைவர். செல்வத்தரசி அவர்கள் நன்றியுரை நல்கினார்.