தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!
திருமங்கலம்:
சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பாக 1261 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் திருமங்கலம், அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு கல்லூரியின் ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறையின் சார்பாக கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் அப்துல் கதிர் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் பேராசிரியர் பொன்மயில் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் பேராசிரியர்கள் திலிபன் அவர்களும், மகாலட்சுமி அவர்களும், தங்கபாண்டியன் அவர்களும், மணிமேகலை மற்றும் பேராசிரியர்களும் முன்னிலை வகித்தனர்
சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட்ன் நிறுவனத்தலைவரும் சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்க பட்டயத்தலைவரும், கண்தான மாவட்டத் தலைவரும் உலக சாதனையாளருமான அரிமா டாக்டர் ஜே. கணேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆனார். கண்தானம் பற்றிய குறும்படம்
திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
மேலும் டாக்டர் ஜே. கணேஷ் அவர்கள் கூறுகையில், அகத்துக்கு அழகு அளிப்பவை மட்டுமல்ல கண்கள் உலகத்தை நாம் காண உதவும் அற்புத உறுப்பு. கண்கள் இல்லாத வாழ்க்கை ஓர் இருண்ட உலகம் இத்தகைய
இருண்ட உலகில் வாழ்பவர்களுக்கு ஒளி விளக்காக கிடைத்ததுதான் கண்தானம். மனிதர்களுக்கு மரணம் உண்டு. ஆனால் கண்களுக்கு மரணம் இல்லை. எனவே மரணத்திற்கு பின் அனைவரும் கண்தானம் செய்யலாம். சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்கு உயர்த்த முடியும் என்றார். ஒருவர் கண்தானம் வழங்கிளால் நான்கு நபர்கள் பார்வை பெற முடியும் என்றும் கூறினார். கண் தானத்திற்கு பதிந்து வைக்க தேவையில்லை என்றும், உறவினர்கள் சம்மதம் இருந்தால் கண்தானம் வழங்கலாம். கண்தானம் பெறுவதில், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும்,உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்திலும் உள்ளது. இதற்கு மாணவ -மாணவிகளின் பங்கு அதிகமாக உள்ளது என்றும் கூறினார்.
மேலும் உடல் உறுப்பு தானம் பற்றி அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் விபத்துக்களால் இறக்கின்றனர். அவர்களின் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுக்கு உயிர் கொடுக்கின்றனர். சிறுநீரகம், நுரையிரல், கல்லீரல், குடல் போன்ற உறுப்புக்களை நாம் உயிருடன் இருக்கும் போதே தானம் செய்யலாம். மூளை சாவு ஏற்பட்டவரிடம் இதயம், கல்லீரல், சிறுநீரகம், கணையம், தோல், எலுப்புகள், நரம்புகள், இதய வால்வுகள், சிறுகுடல், வயிறு, இரைப்பை, கை விரல்கள் மற்றும் கண்களையும்
தானம் செய்யலாம் என்றார். ஒரு நன்கொடையாளர் குறைந்தது 8 பேரை காப்பாற்ற முடியும் என்றார்.

கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு நோட்டீஸ்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர். கல்லூரியின் பேராசிரியர் சவ்பியா பானு அவர்கள் நன்றியுரை நல்கினார்.
