சென்னை: ஸ்ரீ ஹரிஹர புத்திர ஹரிஹர சுதன் ஐயப்பா சேவா சங்கமம் மற்றும் Dr.A.P.J.அப்துல்
கலாம் புனர்வாழ்வு அறக்கட்டளை இணைந்து
10ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நிகழ்ச்சி ஹரிஹரன் அவர்கள் தலைமையில்
கொயப்பேட்டை, சச்சிதானந்தம் தெருவிலுள்ள கஜேந்திர வரத பெருமாள் பக்த ஜன சபையில் சிறப்பாக நடைப்பெற்றது.
இந் நிகழ்வில் மா.சாந்தி மாசிலாமணி, A.தரணியம்மாள், A.பத்பநாபன், A.பேபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்
மேலும் இந்நிகழ்வில் கிருஷ்ணர் வேடம் அணிதல்,
கிருஷ்ணர் படத்திற்கு வண்ணம் பூசுதல்,
உறியடி,
லெமன் ஸ்பூன்,
கிருஷ்ணர் கீர்த்தனை உள்ளிட்டவைகள் நடைப்பெற்றது .
இந்த நிகழ்விற்கு T.தினேஷ்பாபு, C.ராமசந்திரன், S.மணிகண்டன், G.வெற்றி, J.ஜெய்குமார். N.தனுஷ், S.கோபால். S.சுந்தரி, D.தணிகைஅரசு, J.பிரியா. F.சார்லஸ், P.பாஸ்கர், J.நவீன், S.தினேஷ்குமார்,M.முகேஷ்குமார் ஆகியோர் உற்ற துணையாக இருந்தனர்.
இந் நிகழ்விற்கான ஏற்பாடுகளை மா. பிரம்ம ஸ்ரீஹரிஹரன் மற்றும் ஸ்ரீ ஹரிஹர புத்திர ஹரிஹர சுதன் ஐயப்பா சேவா சங்கமம் குழுவினர்கள் மற்றும் அனைத்து நண்பர்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்திருந்தனர்.
