செளகார்பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா பள்ளி சார்பில் பாராம்பரிய கலாச்சார பொங்கல் விழா நிகழ்வு!
சென்னை :
சென்னை செளகார்பேட்டையில் உள்ள ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை ஆய்வாளர் மாப்பிள்ளை துரை, இஸ்மாயில் கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.


இவ்விழாவில் பள்ளி வளாகம் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டு, மாடுகளுக்கு வர்ணம் பூசப்பட்டு இனிப்பு, கரும்புகளுடன்
பானைகள் வைக்கப்பட்டு ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து பாரம்பரிய உடையணிந்து, பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு வண்ண கோலப் போட்டியும் ஆரோக்கியம் நிறைந்த அடுப்பில்லாத சமையல் போட்டியும் நடத்தப்பட்டன.




மாணவர்களுக்கு பேச்சு மற்றும் நடனப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.






இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதை விளக்கும் வகையில் மாணவ,மாணவியர்கள் அம்மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து அம்மாநில உணவுகளையும் காட்சிப்படுத்தினர்.
வர்ணங்கள் பூசப்பட்ட அழகான மாட்டு வண்டி மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பல்லக்குகளில் மாணவச் செல்வங்கள் அமர வைக்கப்பட்டு வீதிகளில் ஊர்வலமாக அழைத்து செல்பட்டனர்.


மேலும் இந்த விழாவில் பள்ளியின் நிறுவனர் ஸ்ரீ சுரேஷ் சந்த் சோர்டியா, பொருளாளர் ஸ்ரீ கியான் சோர்டியா , செயலாளர் அஜய் குமார் சோர்டியா பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மாலினி மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


….
