எக்விடாஸ் அறக்கட்டளை அசோக்நகர் கிளை சார்பில் தை திருநாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

சென்னை:எக்விடாஸ் அசோக்நகர் கிளை மற்றும் புராதான மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பில் மாபெரும் கண் மற்றும் பல் பரிசோதனை
முகாம் நடைபெற்றது.

மேலும் இதில் கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை எக்விடாஸ் நிர்வாகி
கோபிநாத் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் தை பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் பொது மக்கள் 180க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு
பயன்பெற்றனர்.