
சென்னை: முகப்பேரில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28வது ஆண்டு விழா மார் இவானியஸ் அரங்கில் நடைப்பெற்றது. இதில் மெடிமிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முனைவர் ஏ.வி. அனூப் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இவ்விழா குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் வரவேற்பு நடனம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகளுடன் தொடங்கியது. கல்லூரி செயலர் அருட்தந்தை மேத்யூ பள்ளிகுன்னல் அவர்கள் ஆசீர்வாதம் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். ஸ்ரீகாந்த் அவர்கள் 2024-2025 கல்வி ஆண்டிற்கான கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார்.
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்குகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பல்கலைக் கழக அளவில் தரவரிசையில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தேர்ச்சி பெற வைத்த
பேராசிரியர்கள் மற்றும் கல்லூரியில் 10 முதல் 20 ஆண்டுகள் சேவையை முடித்த பேராசிரியர்கள் ஆகிய அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந் நிகழ்வில் நூறு சதவீத வருகை பதிவு பெற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
மேலும் ஆராய்ச்சி வெளியீடுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் நூலக வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திய பயனர்களுக்கும் (மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்) விருதுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் தேசிய கீதத்துடன் இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
