கங்கைகொண்ட சோழபுரம்:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் ஆலய முகப்பில் மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இதன் நிறுவனத் தலைவர் முனைவர் எஸ். முருகன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்புற நடைப்பெற்றது.

இதில் ஐந்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜி என்கிற கணேசன்
வடிவேல், அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கதிரேசன், சத்தியமூர்த்தி, வேம்பரசன். பாஸ்கர் ஆகியோர் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்து நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் பொன்னாடை (அன்பளிப்பு கதிரேசன்)அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
முன்பாக இரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றி விரிவாக பேசப்பட்டது.
கொடையாளர்ககளை இணைப்பது, நிர்வாக பொறுப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பை விஜி அவர்கள் சிறப்பான முறையில் நெறிப்படுத்தினார்.
இறுதியில் மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளை நிறுவனத்தலைவர் முனைவர் எஸ் முருகன் அவர்கள் விரிவுரை மற்றும் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்களின் சிற்றுரையுடன் விழிப்புணர்வு நிகழ்வு நிறைவுற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் மலரும் நினைவுகள் அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து சுய அறிமுகத்துடன் மகிழ்ச்சியுடன் நிழற்படம் எடுத்துக்கொண்டனர்.
