மதுரவாயல் :
மேக்னம் அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ,விவசாயி, முதலாளி, மகளிர் தொழில் முனைவோர் ஆரம்ப விழா சென்னை மதுரவாயல், விஜிபி அமுதா நகரில் சிறப்பாக நடைபெற்றது.

மேக்னம் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் முனைவர் எஸ். கோமதி அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ.க மாநில வர்த்தக பிரிவு தலைவர் ஏ.என் ராஜகண்ணன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சௌதாமணி, பாஜக மாநில ஊடக பிரிவு செயலாளர் ஸ்ரீரங்கா,கிளைமேட்டிக் சேஞ்ச் மேட்டேர்ஸ் நிறுவன தலைவர் எம்.பிரபு காந்தி ஜெயின் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முனைவர் கோமதி அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று கௌரவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் மதுரவாயல்,நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் புடவை, வேட்டி,அன்னதானம் வழங்கப்பட்டது.

இறுதியில் மேக்னம் அறக்கட்டளையின் பொது செயலாளர் முனைவர் பி..கமலக்கண்ணன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.