தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில்
அரசியல் சட்ட சாசனத்திற்கு விரோதமாக இயற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்துவதை கைவிடக் கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை:தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில்
அரசியல் சட்ட சாசனத்திற்கு விரோதமாக இயற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்துவதை கைவிடக் கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.மாரப்பன் மற்றும் இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் திரு.எஸ்.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.செ.விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் கண்டன உரை ஆற்றினர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தும் வரை அகில இந்திய அளவில் போராட்டம் தொடரும் என கூட்டாக தெரிவித்தனர்.
பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம்வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு பதாகைகளை கையில் ஏந்தி தங்களது கண்டன கோஷங்கள் எழுப்பினர்.