மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு தமிழ்நாடு உள்ளாட்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் எல்.ஸ்டீபன் மற்றும் தகவல் அறியும் உரிமை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர். மாணிக்கவாசகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் எம். கிறிஸ்டோபர், மாநில துணை பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில இணைச் செயலாளர் விஜயகுமார், மாநிலச் செயலாளர் தாமஸ், மாநில பேச்சாளர் சூளை எஸ். ராமலிங்கம், மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மகளிர் அணி மாவட்ட தலைவி பா. ராஜலட்சுமி, மாநிலச் செயலாளர் விஜயா ராமுலு,மத்திய சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் ஜே. ஹேம்நாத், மற்றும் வழக்கறிஞர் நரேந்திரன்,முனீர், ராஜேஷ், மீரான், குட்டி, தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.