சென்னை :முன்னாள் துணை பாரதப் பிரதமரும், முன்னாள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் 115-வது பிறந்த நாள் விழா சென்னை,சேப்பாக்கம் எழிழகம் வளாகத்தில் நடைப்பெற்றது.
சென்னை துறைமுகம் எஸ்.சி/ எஸ்.டி தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் குப்புசாமி அவர்களின் முயற்சியினால் சென்னை எழிலகம் வளாகத்தில் அமைந்துள்ள பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு சிலை அமைப்பாளர் குப்புசாமி அவர்களின் பேரனும் அகில இந்திய பாபு ஜெகஜீவன்ராம் சமூகநீதி இயக்கத்தின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான மாவீரன் திலீபன்,துணைத் தலைவர் தளபதி பிரபாகரன்,மாநில பொருளாலர் சகஜானந்தா மற்றும் நிர்வாகிகளான அருண்,பிரசாந்த், சண்முகா, ஈ.சி.ஆர் சுந்தர் ஆகியோரது ஏற்பாட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு
சென்னை துறைமுக பொறுப்பு கழக பேரதிபர் சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மேலும் இந் நிகழ்வில் சென்னை துறைமுக ஆணைய துணை பேரதிபர் பாலாஜி அருண்குமார்,
அகில இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை,
தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்புத்துறை உறுப்பினர் ஏ.ஜெய்சன்,அம்பேத்கர் முன்னணி கழக பொதுச் செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமுலு,தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில சட்ட ஆலோசகர் தங்கமணி,
சென்னை துறைமுகம் எஸ்.சி/எஸ்.டி பிரிவு தொழிலாளர்கள் நல்வாழ்வு சங்க தலைவர் துறைமுகம் கே.வெங்கடேசன், சென்னை துறைமுக எஸ்.டி தொழிலாளர் நல்வாழ்வு சங்கத்தலைவர்சங்கர்,பொதுச்செயலாளர் ஜானகிராமன், சென்னை துறைமுக தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கண்டு பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.
மேலும் ஏழை,எளிய மக்களுக்கு வேட்டி,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.