அண்ணாநகர்:சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பொதுமக்கள் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் ஐ.சி.டபிள்யூ.ஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் அவர்களின் ஏற்பாட்டில்,
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏசியாட் காலனி அருகே ஏசியாட் காலனி நலச் சங்க செயலாளர் எஸ்.ஜெயபிரகாஷ், ஏசியாட் காலனி நலச் சங்க குழு உறுப்பினர் பி.ராஜன் ஆகியோர் முன்னிலையில் “புதிய வாட்டர் கூலர்” பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஜூபிலி ஹவுசிங் பிரைவேட் இயக்குனர் லயன் டாக்டர்.ஏ.ஆர்.தர்மலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு புதிய வாட்டர் கூலரை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, முலாம்பழம் மற்றும் குளிர் தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் லயோலா கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம்-கோயம்புத்தூர், அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சட்டப் பள்ளி, சென்னை மற்றும் ஹோச்சூல் ஃபர்ட்வாங்கன் பல்கலைக்கழகம், பெர்லின், ஜெர்மனி ஆகியவற்றின்
ஐ.சி.டபிள்யூ.ஓ. பயிற்சி மாணவர்கள் பலர் உடன் இருந்து தன்னார்வ தொண்டு செய்தனர்.