விட்டதை பிடிக்குமா இந்த கொக்குகள்? இல்லை.. மீண்டும் அடுத்த தேர்தல் வரையில் அப்படியே நிற்குமா?
தமிழ்த்தேசிய அரசி யல் கூட்டமைப்பின் தலைவர் பாவலர் எதிர்நோக்கு கேள்வி!


எதை மறந்தாலும் நாம், நாட்டில் வருகின்ற திரைப்பட நாடகங்களையும் நடக்கின்ற தேர்தல் அரசியலையும் அதில் இருப்போரையும் நடிப்போரையும் நாம் மறப்பதேயில்லை. காரணம் நம் வாழ்வோடு அவை ஒட்டி இருப்பதே.

இப்பொழுது அவை இரண்டும் ஒன்றாகிப் போனது தான் இன்றைய இந்திய வரலாறு. அரசியல் செய்கின்றவர்கள் நடிகர்களை போலவும் நடிகர்கள் தாங்கள் சம்பாதித்தன போதாதென்று அரசியல் தலைவர்களாகவும் ஆகிவிட.. மக்களுக்கு இரண்டுமே பொதுவாகிப் போனது. அதனால் காசு கொடுத்து ஒன்றையும்,காசு வாங்கிக் கொண்டு இன்னொன்றையும் பார்க்கத் தயாராகிப் போயினர்.

அதனால் கூச்சமின்றி திரைப்படக்காரர்கள் அறிவிப்பாக அள்ளி வீசுவதும் அதனை பார்த்து மக்கள் கைதட்டி மகிழ்ந்தும் வாக்களிப்பது வழக்கமாகி விட்டது.

அதனால் எதை விட்டாலும் பதவியை மட்டும் விடமாட்டோம் என்பவர்களின் முழக்கம் பெரிதாகிவிட.. மக்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் அறியாமை மூடித்தனமாக, நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. முன்னேற்றமும் இல்லாமல் விற்பனை பலகைகளின் கீழே மக்களின் வாழ்வுரிமைகள் தொங்க விடப்படுகின்றன.

யாருக்கும் அரசியல் சட்டம் என்ன சொல்லுகின்றது.. என்கின்ற கவலையில்லை. தேர்தல் என அறிவிக்கப்பட்டு விட்டலே.. யாரும் எதுவும் தேர்தல் ஆணையத்தின் கைகளுக்குள் வந்துவிடும். அந்த நடைமுறையை மீறி நாட்டின் முதலிடத்தில் இருப்பவர்கள் கூட அதனை மீறி நடந்துவிட முடியாது. அனைத்து அதிகாரமும் முடக்கப்பட்டு விடும். அதனை முழுமையாக செய்து காட்டினார் நம்ம டி என் சேசன். எதுவொன்றும் செயல்படும் நேரந்தால் அது சிறப்பு பெறுகிறது.

ஆனால் நம் தலைமையமைச்சர் அவர்கள் ஒரு தொகுதியின் போட்டியிடும் வேட்பாளராக இருக்க.. அதன் வாக்குப் பதிவு நடக்கும் முன்பே கன்னியாகுமரி முனையில் அமர்ந்து ஓய்வெடுக்க அது பெருஞ் செய்தியாக்கப் படுகிறது.?!

நாட்டு மக்களை பற்றிய சிந்தனை வற்றி, வெற்றி பெறுவதற்கான காரணங்களே மறைமுகமாக முன்வைக்கப்படுவது கேவலம்.

அதுபோலவே தமிழ்நாட்டிலும் பலரும் மாறாத வெற்றியாளர்கள். முன்பும் இப்பொழுதும். அதனால், தமிழ்நாட்டின் உரிமைகள் ஏதாவது மீட்கப்படுமா? கடந்த காலங்களில் தமிழ்நாடு இழந்து கிடக்கும் மாநில உரிமைகள், வேலை வாய்ப்புகள், ஆற்று நீர் உரிமைகள் கேள்விகளாகி மீண்டு வருமா? மாநில சுயாட்சி! மத்தியில் கூட்டாச்சி! மலருமா? வானூர்தி நிலையங்களில் தொடர்வண்டி நிலையங்களில் தமிழில் மட்டும் சொன்னால் போதுமென்றோ? எழுதினால் போதுமென்றோ.. அல்லது இந்தியாவில் இருக்கும் பிற மாநில நிலையங்களில் அதுபோலவே நம் தமிழிலும் சொல்ல, எழுத வேண்டும் எனவோ கேட்டு பெற்றுத் தருமோ?

தமிழ்நாட்டு உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதிகள் வரை தமிழ் நாட்டினரே பதவியில் அமர்த்தும் காலம் மீண்டும்வர குரல் ஒலிக்குமா? விட்ட மீன்களைத்தான் பிடித்து பெற்றுத்தர முடியுமா?

அண்டை மாநிலங்களிடம் இழந்த தமிழர் பகுதிகளை மீண்டும் தமிழ் நாட்டோடு இணைக்கும் முயற்சிகள் முன்னெழுமா?

தமிழ் நாட்டின் தொழில் வளம் தமிழருக்கே! என் ஏதாவது தவமிருந்து பெற்றுத்தர முயலுமா? அல்லவா தட்டுகளையே நம்பி வாழ விட்டு விடுமா?

விட்டுக்கொடுத்த தமிழர் பகுதியான கச்சத் தீர்வை மீண்டும் தமிழ் நாட்டோடு இணைக்கப் பாடுபடுமா? அதனால் தமிழ் கடலோடிகளான தமிழ் மீனவ மக்கள் இலங்கை சிங்களவர்களால் சுட்டுக் கொல்லப்படும் அவலங்கள் ஒழியுமா?இல்லை.. நமக்கெதற்கு அந்த வம்பெல்லாம்.. என உறங்கத்தான் போய்விடுமா?

தமிழ்நாட்டில் தமிழ் வாழ்க?! எனச் சொல்லியே தாய்த் தமிழை ஒழித்துகட்டி விட்டு.. எங்கும் ஆங்கிலம்? எதிலும் இந்தி? என்கின்ற அவலங்கள் ஒழியுமா?அதற்காக ஒற்றைக்காலில் நிற்கும் நல்லவர்களை தான் நாம் பார்க்க முடியுமா?

அவற்றோடு சேர்ந்து தமிழரை கேலி பேசும் போலித்தனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் கோழைத் தனங்கள் அழியுமா? அல்லது எதையும் சாதிக்கலாமலே பாராளுமன்றத்தில் நடப்பதும் நிற்பதுமாகவே காலங்கள் கழியுமா? என்பதை தமிழர் நாமும் அவர்களோடு நின்றுதான் பார்க்க வேண்டும்!

தமிழரின் உயர்வுகளை தூக்கிப் பேசும் செயல்கள் தான் இனிமேல் வளருமா? தொடருமா? என்பதை அடிபட்டும் திருந்தாதவர் நாம் என்பதை காலம் தான் பதிலாக சொல்லூமா? அல்லது இது போன்ற நிலைமைகள் போக பாராளுமன்றத்தில் குரல் ஒலித்து பதில் கிடைக்க வழிகள் புதிதாக்கப்படுமா என்பதை, அவற்றையெல்லாம் விரும்பும் தமிழர் நாம்! என்பதாலும் தமிழ்த்தேசிய அரசியல் கூட்டமைப்பின் தலைவர் என்பதாலும் தமிழர் தன்னுரிமை கட்சி சார்பிலும் எதிர்பார்ப்பில் கேள்விகளாக கேட்டு முன் வைக்கின்றோம்!

இந்த தேர்தலில் போட்டியிட்ட எங்களின் பதிமூன்று பாராளுமன்ற வேட்பாளர்களுக்கும் எதுவுமின்றி ஆதரித்து வாக்களித்த பெருமக்களுக்கு நன்றியை தமிழ்த் தேசிய அரசியல் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்: உலகத் தமிழின பேரமைப்பு தலைவர் கரு சந்திரசேகரன், முனைவர் அயனாவரம் இராம பாபு தமிழர் தன்னுரிமை கட்சி கொள்கை பரப்புச் செயலாளர், ஏனைய கட்சித் தலைவர்கள் சார்பிலும் உரித்தாக்கிக் கொள்கின்றோம்.

தொடரும் எங்களின் சனநாயக பணிகளுக்கு கைகொடுத்து நிற்க வரவழைக்கின்றோம்!..

வாழ்க நம் மக்களாட்சி!வாழட்டும் அதனை நம்பி வாக்களித்த நாட்டு மக்கள் என
தமிழ்த்தேசிய அரசியல் கூட்டமைப்பின் தலைவரும், தமிழர் தன்னுரிமை கட்சியின் தலைவருமான
பாவலர் மு.இராமச்சந்திரன்  தெரிவித்தார்.