சென்னை:அகில இந்திய பாபு ஜெகஜீவராம் சமத்துவ இயக்கத்தின் சார்பில் 74 வது குடியரசு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அகில இந்திய பாபு ஜெகஜீவராம் சமத்துவ இயக்கத்தின் தேசியத் தலைவரும்,முன்னாள் மக்களவை சபாநாயகருமான
மீராகுமார் அவர்களின்
ஆணைக்கிணங்க, மாநில இளைஞரணி தலைவர் மாவீரன் திலீபன் அவர்கள் தலைமையில் பெரம்பூர் பகுதியில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் தேசிய கொடியினை ஏற்றி வைத்துபள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வை மாநில செயலாளர் பெரம்பூர் ப. பிரசாந்த் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இதில் நிர்வாகிகளான மணி பாலா,கார்த்திக் , வீரமணி , வெஸ்ல் ராஜ் , விக்கி , சண்முகம் , அருண் , மணி ,, நித்திஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.


