சென்னை சூளை விஸ்வபாரதி நடுநிலைப்பள்ளியில் 74 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நிகழ்வு!

சென்னை: சூளையில் உள்ள விஸ்வபாரதி நடுநிலைப்பள்ளியில்
74வது இந்திய குடியரசு தின விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வி. மலையராஜா, ஆர். செல்வம்,கே.எம்.கார்டன் நித்தியானந்தம், சூளை பொதுநல மன்ற நிர்வாகிகளான சூளை ராஜேந்திரன், சூளை குப்புசாமி, பா.சந்திரசேகர், புல்லட் கோபிநாத், ஆரணி சீனிவாசன், மூர்த்தி, குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி
சிறப்புரை ஆற்றினர்.

இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் மற்றும் வழக்கறிஞர் கே. பி. சந்திரசேகரன், அம்பிகா, தலைமை ஆசிரியை பியூலா கலைச்செல்வன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.