பட்டியலின மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் மனித மலத்தை கலந்த சமூக விரோதிகளை நடுநிலையோடு செயல்பட்டு உடனே நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கும் அதிமமுக சார்பில் பாராட்டுகளை தெரிவித்த பசும்பொன் பாண்டியன்!

பட்டியலின மக்களுக்கான தீண்டாமைக்கு எதிராக தொடர் நடவடிக்கை தேவை என்பது தான் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தீவிர கோரிக்கையாகும்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முதுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கை வயல் தெருவில் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இம்மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் சமூக விரோதிகள் மனித மலத்தை கலந்து இருக்கின்றர்கள் அதனை பருகிய அப்பகுதி சிறுவர், சிறுமிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவது வேதனைக்கூறிய செயலாகும் இந்த செயல் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியில் ஒரு பெறும் அதிர்ச்சியையும், வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட சமூக விரோதிகளின் இந்த நாசக்கார நடவடிக்கை மற்றும் ,தீண்டாமை வன்கொடுமையை யும், நானும் நான் சார்ந்து உள்ள அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகமும் வன்மையாக கண்டிக்கிறோம்.

அந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் பட்டியலின மக்கள் வழிபடவும், பொது இடங்களை பயன்படுத்தவும் சாதி, ஆதிக்க வாதிகள் மறுத்து தீண்டாமையை கடை பிடித்து வருவதை அறிந்து, அவர்களை உடனடியாக கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அவர்களையும் மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர்களின் சீறிய செயலை
மனதார பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அதை போன்று அந்த ஊரில் உள்ள தேநீர் கடைகளில் இந்த நவீன மற்றும் விஞ்ஞான காலத்திலும், மனித நேயம் பேசுகிற இந்த காலத்திலும் இரட்டை குவளை முறை கடைப்பிடிப்பதாக தெரியவந்து இருக்கிறது அப்படிப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை அப்பொழுது எடுக்கப்பட்டிருக்கிறது.

பொது இடங்களில் அனுமதிக்க மறுப்பது, இரட்டை குவளை முறை உள்ளிட்ட செயலானது அப்பட்டமான தீண்டாமை வன்கொடுமையுடைய உச்சமாகும் எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டும். அங்கு நிலவும் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டவும் தமிழகத்திலே இது போன்ற சம்பங்கள் இனி நிகழாத வண்ணம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்வாதோடு. அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்கிட தமிழக அரசையும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தையும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான சே.பசும்பொன்பாண்டியன் அவர்கள் தெரிவித்தார்.

சே.பசும்பொன்பாண்டியன்