சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்வு!
வியாசர்பாடி:சகோ.சிகா சமூகச் சேவை இயக்கத்தின் 34-ஆம் ஆண்டு விழா-2022 நிகழ்ச்சி வியாசர்பாடியிலுள்ள சகோ.சிகா சமூக சேவை இயக்கத்தின் பயிற்சி அரங்கில் நிறுவன செயலாளர் மா.சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஜானகிராமன், துணை திட்ட இயக்குநர்,தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் (TANSACS), Saminathan, TSU Team Leader,Anibon, Correspondent (Gift Donator),ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைவர்.நீலமேகம் மற்றும் பொருளாளர்,நஷீர் அஹம்மது , ஆஸ்திரேலியா தொழில் அதிபர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்வை மு.ஆனந்தி அவர்கள் (General Program Coordinator) சகோ சிகா நிறுவனத்தின் வரலாற்றையும் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் (Overall Projects) PPT மூலமாக விவரித்ததுடன் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
மேலும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை மூன்று மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் பணிகளை விரிவாக பேசினார்.

பிறகு HCL Foundation நிறுவனத்தின் மூலமாக சென்னை காந்தி நகரில் நடைபெறும் 7 மழலையர் பள்ளியில் நடைபெறும் 175 பிள்ளைகளின் செயல்பாடுகளை பற்றி வனிதா, Program Coordinator அவர்கள் விவரித்து பேசினார்

































Terre des Hommes Netherlands என்ற நிறுவனத்தின் உதவியுடன் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறு தொழில் செய்ய கடன் கொடுப்பதை பற்றி அதன் கணக்காளர் கி.பாலன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.
Sundareswaran, NARI Project,Raman, IDU Project Program Manager,Nathiya, TANSACS – FSW Project, Program Manager ஆகியோர் கலந்துக்கொண்டு அந்தந்த புராஜக்ட் பற்றி விவரித்தனர்.

இறுதியில் அமல்ராஜ் அவர்கள்,(Kanchipuram Project Coordinator) நன்றியுரை நல்கினார் . மேலும் இந் நிகழ்வில் கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வெகுமதி செய்யப்பட்டது
சிலர் பாடல் பாடியும், நடனம் ஆடியும் உற்சாகப்படுத்தினர்.
இறுதியில் முன்னால் பொருளாளர் ஜான் அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
