சென்னை: வட சென்னை மேற்கு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஜோஸ்வா ஜெரால்டு அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் பெரம்பூர் பகுதியில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வட சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ்
தலைவர் பரிக்ஷித், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ரகுமான், வட சென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மாவீரன் திலீபன். பெரம்பூர் தொகுதி துணைத்தலைவர் பிரசாந்த் மற்றும் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் தளபதி பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
