திருவல்லிக்கேணி : மே,17

திருவல்லிக்கேனி D1 காவல் நிலைய எழுத்தர் தினேஷின் அதிகார வரம்பு மீறலுக்கு அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையான கண்டனம்!

ஜனநாயகத்தின் நான்காம் தூண் என அனைவராலும் போற்றப்படும் பத்திரிகைத்துறை சார்ந்த உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சமீப காலங்களில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் ஏராளம்.

குறிப்பாக அரசு ஊழியர்களாக பணியாற்றும் அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வரம்பு மீறலில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அப்படி காவல்துறையை சேர்ந்த ஒருவரால் செய்தியாளருக்கு எதிராக ஒரு வன்முறை நிகழ்த்தப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திருவல்லிக்கேனி D1 காவல் நிலையத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கேப்டன் டி.வி.நிருபர் முஸ்தபாவுக்கு வந்த தகவலை அடுத்து அங்கு அவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் விசாரிக்க வந்த செய்தியாளர் முஸ்தபாவிடம் பேசிய D1 காவல் நிலைய எழுத்தர் தினேஷ் முஸ்தபாவின் செல்போனை பறித்துவிட்டு “பொய் வழக்கு போட்டு லாக்கப்பில் உள்ள தள்ளிடுவேன் ஒழுங்கா போயிடு” என்று கடுமையாக மிரட்டியுள்ளார். செய்தியாளரை அவரது பணியை செய்ய விடாமல் தடுத்து அவரை மிரட்டி செல்போனை பறித்து அதிகார வரம்பு மீறலில் ஈடுபட்டுள்ளதை அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

காவல் நிலைய எழுத்தர் தினேஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.