சென்னை:தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் -வெளிநாடு பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ,தியாகராயாநகர் பாலன் இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநிலத் தலைவர்
டாக்டர் என்.எம். சரண் தலைமை தாங்கினார்.

மேலும் இந்த கூட்டத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ,
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் -வெளிநாட்டுப் பிரிவு பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.வசந்த் பிலிப்ஸ் அபிஷேக் ,
துணைத் தலைவர்
டாக்டர் ஆர்.ஜெயலட்சுமி , டாக்டர் டி. அரவிந்தன்,யுகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு (FMG)தற்காலிக தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் TNMC  காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும்,
FMG கள் பலருக்கு 2(or) 3 ஆண்டுகள் CRMI பயிற்சியை TNMC வழங்குவதை  கைவிட வேண்டும்,
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த CRMI இடங்களில் FMG களுக்கு 7.5% வழங்குவதை  20% ஆக உயர்த்திட  வேண்டும்,
மாவட்ட மருத்துவமனைகளிலும் FMG கள் CRMI பயிற்சி பெற அனுமதித்திட வேண்டும்,CRMI ஆக பணிபுரியும் FMG களுக்கு விடுதி வசதிகளை வழங்கிடக் வேண்டும் என உள்ளிட்ட
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வரும் ஜனவரி மாதம் முதல்வாரம் சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டன.