சென்னை:
தாம்பரம் மற்றும் பல்லாவரம் நாகல்கேணியில் உள்ள புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அம்பேத்கர் மக்கள் படை நிறுவனர் மதிபறையனார் அவர்களின் தலைமையிலும், தயா அமைப்பின் சார்பாகவும் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பேத்கர் மக்கள் படை நிர்வாகிகள் மற்றும் தயா அமைப்பு நிர்வாகிகள் திறளாக கலந்துகொண்டனர்.


மேலும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் சென்னை தாம்பரம் அருகே உள்ள சித்தாலப்பாக்கத்தில் அம்பேத்கர் மக்கள் படையின் பெயர் பலகை திறக்கப்பட்டது. அம்பேத்கர் மக்கள் படையின் பொருளாளர் சமூக சேவகர் சிவா அவர்கள் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.


