வடசென்னை புளியந்தோப்பு முத்து மருத்துவமனை மருத்துவர்கள் 33 வயது இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!

சென்னை :சென்னை புளியந்தோப்பு முத்து மருத்துவமனை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவ வளாக அரங்கில் நடைப்பெற்றது.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:வடசென்னை. புளியந்தோப்பு பகுதியில் 12 வருடங்களாக முத்து மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, உலகத்தரம் வாய்ந்த தீவிர சிகிச்சை பிரிவு (ICU), அறுவை சிகிச்சை அரங்கம் (OPERATION THEATRE) உள்ளிட்ட பிரிவுகள் அனுபவமிக்க மருத்துவர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வடசென்னையில் முதன்முறையாக எக்மோ (ECMO) முத்து மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு 99% இறப்பு விகிதம் இன்றி குணமடைந்து சென்றனர்.

100% oxigen இருப்பில் வைத்து சிறப்பாக செயல்பட்டது. மேலும் பல உயர்தர அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. அப்துல் மதீன் என்கிற 33 வயதுடைய இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

அப்துல் மதீனுக்கு சிறுநீரக செயல் இழப்பு, ரத்த கொதிப்பு, இடது நுரையீரல் செயல் இழப்பு, வலது இருதய செயலிழப்பு,போர்ட்டல் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் இருந்ததால், பல கார்ப்பரேட் மருத்துவமனைகளால் கைவிட்ட நிலையில் முத்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர். மருத்துவர் சொக்கலிங்கம், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மருத்துவர் முத்துரத்தினம், சிறுநீரகவியல் மருத்துவர் செந்தில் குமார், மற்றும் மயக்க மருந்து நிபுணர்களான பிரவீன் நாத், மருத்துவர் ரவி மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் காசி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் துணிவுடன் நம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து முடித்தார்கள். தற்போது நோயாளி அப்துல் மதீன் நல்ல நிலையில் உள்ளார் என்று தெரிவித்தனர்.