சென்னை :
லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சவுத் ஸ்டார்ஸ் சார்பில் திரு. சையத் என்கிற மாற்றுத்திறனாளியின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் கரும்பு ஜூஸ் பிழியும் கருவி நன்கொடையாக வழங்கப்பட்ட நிகழ்வு சங்கத்தின் தலைவர் திருமதி கிரிஜா சம்பத் அவர்கள் தலைமையில் முகப்பேர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் அரிமா கே.ஜெகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

மேலும் அரிமா ஜி.எம் பாலாஜி ரத்தினம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக 200 பேருக்கு பாபாஜி மூலிகை தேனீரை பொதுமக்கள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளுக்கு கொடுத்தார். மேலும் 60 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

அரிமா போஸ் அவர்கள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முககவசத்தை பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு விநியோகம் செய்தார்.

இந்நிகழ்வில் முகப்பேர் காவல் ஆய்வாளர் திரு.நேரு அவர்கள் கலந்துக் கொண்டு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அரிமா சங்க நிர்வாகிகளான செயலாளர் அரிமா. சகுந்தலா சம்பத், பொருளாளர் அரிமா. மாதவி செல்வராஜ் மற்றும் சங்க உறுப்பினர்களான சங்க விரிவாக்க தலைவர் அரிமா.கீதாகுமார் அரிமா. அலமேலுமங்கை, அரிமார.அழகு ஜோதி வீரப்பன், அரிமார.சரவண ராணி, அரிமா.ராணி, அரிமா.புவனேஸ்வரி அரிமா. கலைச்செல்வி அரிமா. செந்தாமரை அரிமா.சம்லாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



