சென்னை : இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளை, எஸ்.ஆர் பவுண்டேஷன்,எம்.என்.கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் தண்டையார்பேட்டையில் நடைப்பெற்றது.

இந்த முகாமிற்க்கு இந்திய மாலுமிகள் நல அறக்கட்டள தலைவர் ஆ.பாபு மைலன் அவர்கள் தலைமை வகித்தார்.

எஸ்.ஆர் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் புனித் ஜெயின்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். எஸ்.ஜெஸிலின், சமூக நீதிப்பேரவை மாநிலத் தலைவர் சேவரத்னா பால்ராஜ் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த இலவச கண் சிகிச்சை முகாமை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் அறியும்  உரிமை சட்ட பிரிவு மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு துவக்கி வைத்தனர்.

மேலும் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்த.முகாமில், அனைவருக்கும் இலவசப் கண்பாா்வை பரிசோதனை, ரத்த அழுத்த சோதனை, நீரிழிவு பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு மூக்கு கண்ணாடி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், ஒய்.எம்.சி.ஏ குப்பம் ஊர் தலைவர் எம்.அன்பு பிரகாஷ் ,தாய்,தந்தை சமூக அறக்கட்டளை நிறுவனர் தலைவர் வண்ணை எஸ்.அசோக் குமார்,
இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு மாநில அமைப்பாளர் எஸ்.எஸ்.அருண்குமார், ஒய்.எம்.சி.ஏ குப்பம் மீனவர் பஞ்சாயத்து சபை ஜெ.வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

முன்னதாக இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு மத்திய அரசின் இ-ஸ்ரம் திட்டத்தின் கீழ் இலவச இன்சூரன்ஸ் பதிவு மற்றும் 200 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.