சென்னை: ஜுலை, 13

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க ( IMJU ) நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள திரு.மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., அவர்களை நேரில் சந்தித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் IMJU சார்பில் அதன் மாநிலத் தலைவர் மோகன் தாரா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மாநில செயலாளர் சங்கர், இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் உடன் வந்த பத்திரிகையாளர் ச.விமலேஷ்வரன் தனது சார்பிலும் காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்கு காவல் ஆணையரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோன்று இச்சங்கம் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தேசிய குழு உறுப்பினர் சபீர்பாஷா, நமக்காக டிவி நூதன் பிரசாத் ஆகியோர் சந்திப்பின் போது உடன் இருந்தனர்.