புராஜெக்ட் ப்யூச்சர் இந்தியா டிரஸ்ட் மற்றும் நம்தேசம் பவுண்டேசன் சார்பில் அரசு குழந்தைகள் காப்பகத்தில்
மரம் நடும் நிகழ்வு
சென்னை :அக், 04,2020
உலக பெண் குழந்தைகள் தினத்தை (அக்டோபர் 11, 2020) முன்னிட்டு சமூகப் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சென்னை புரசைவாக்கத்திலுள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ப்யூச்சர் இந்தியா டிரஸ்ட் மற்றும் நம்தேசம் பவுண்டேசன் சார்பில்
மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னையிலுள்ள பல்வேறு இடங்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துக் கொண்டு மரக்கன்றுகளை காப்பகத்தின் கண்காணிப்பாளர் தலைமையில் நடவு செய்தனர்.

மரகன்றுகளை நடுவோம் – மனம் மகிழ்வோம் (அனைவரும்) என்ற உயரிய நோக்கத்தோடு இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சமூக அக்கறையுடன் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் நடைப்பெற்றது குறிப்பிடத்த்க்கது.

