முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்களின் பிறந்த நாளில் புகழ் மரியாதை செலுத்திய தீவிர ரசிகைகள்!

தி. நகர்:
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், புரட்சி தலைவர் பாரத ரத்னா எம். ஜி. ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு தியாகராய நகர் பகுதியிலுள்ள எம். ஜி. ஆர். அவர்களின் நினைவு இல்லத்தில் வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த அவரின் தீவிர ரசிகைகளான ரேவதி, ராஜகுமாரி, சத்யா ஆகியோர் மலர் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தினர்.

