சென்னை:இபிஎஸ்-95(EPS- 95)அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சென்னை மண்டலம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் இச்சங்கத்தின் சென்னை கொளத்தூர் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இந்த கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு சென்னை மண்டல தலைவர் வி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். சென்னை மண்டல செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்புறை ஆற்றினார் மண்டல அமைப்பாளர் எஸ். பரமசிவம் மற்றும் நந்தகோபால் Tncsc ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இதில் EPS- 95 அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்க தலைவர் கே. கனகராஜ், மத்திய சங்க பொருளாளர் எஸ் சேரன் மற்றும் ஏ. கே. சந்தான கிருஷ்ணன் Tncs ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்

மேலும் இந்நிகழ்வில் சென்னை மண்டல துணைத் தலைவர் வி. பாலு, ஆவின் பாரதி, விஜயகுமார், ஜெயபால், சுந்தரம் SRF, ஆகியோர் உரையாற்றினர்.கே. கோதண்டம்  அவர்கள் நன்றியுரை   நல்கினார்.

மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1). இச் சங்கத்தை மேலும் வலுவுள்ளதாக வடிவமைக்க வேண்டும்.
2). புதிய உறுப்பினர்களை இணைத்து புத்துணர்ச்சி அளிக்க வேண்டும்.
3). இச்சங்கம் அகில இந்திய அமைப்புகளோடு ஒன்று சேர்ந்து ஓய்வூதிய உயர்வுக்கு தொடர்ந்துபோராடுவது.
4).நிதி பற்றாக்குறையை போக்க தேவைப்படும் நிதி திரட்டுவது.
5).ஓய்வூதியம் சம்பந்தமாக பாராளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேசுவது மற்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது.
6)வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் போது நாம் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற என்று முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.