சென்னை:தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்க (ஆக்ஸி) புதிய நிர்வாகிகள் தலைவராக டாக்டர்.ஜெயராணி காமராஜும், செயலாளராக டாக்டர் குந்தவியும் தேர்வு பெற்றுள்ளனர்.

ஆக்ஸி எனப்படும் தென்னிந்திய மருத்துவர்கள் சங்க 39வது சர்வதேச மருத்துவ மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் உலகின் பல பாகங்களில் இருந்து நேரிலும், ஆன்லைன் (ஜூம்) மூலமாகவும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மகப்பேறு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன மேம்பாடுகள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இம்மாநாட்டின்போது 2023ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் டாக்டர் ஜெயராணி காமராஜ் தலைவராகவும், டாக்டர் குந்தவி செயலாளராகவும் தேர்வு பெற்றனர்.

நடப்பு தலைவர் டாக்டர் பிரேமலதா, புதிய தலைவராக தேர்வு பெற்ற டாக்டர்.ஜெயராணி காமராஜுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் டாக்டர் ஜெயராணி காமராஜ் பேசுகையில் கூறியதாவது : தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தை (ஆக்ஸி) இன்னும் மேம்படுத்தும் பொருட்டு பல புதிய கமிட்டிகள் அமைத்து செயல்படுத்தப்படும்.

மருத்துவ வல்லுனர்களுக்கும், அவர்களது மருத்துவமனைகளுக்கும் ஏற்படும் பிரச்சனைகளை சட்டரீதியாக எதிர்கொள்ள சட்ட மையம் (லீகல் செல்) அமைக்கப்படும்.  டாக்டர் விவேக்,  டாக்டர் எஸ்.விஜி, கேரளாவில் இருந்து சில சட்ட வல்லுனர்கள் ஆகியோர் இதில் இடம் பெறுவர்.

தன்னார்வ சேவை மையங்கள், பெண்கள் அமைப்புகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் ஆகியோரின் உதவியோடு பொதுமக்கள் அமைப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம் மருத்துவ சேவை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு டாக்டர் ஜெயராணி காமராஜ் பேசினார்.

பொதுமக்கள் விழிப்புணர்வுக்கு சுமதி, கற்பகம், இளம்பருவத்தினர் ஆலோசனைக்கு விஜயலட்சுமி ஞானசேகரன், பிரேமலதா, என்டோஸ்கோபிக்கு மீனாட்சி சுந்தரம், வனிதா, மிட்லைப்புக்கு தீபா, பிரியா கண்ணப்பன், ராஜஸ்ரீ, குழந்தையின்மை ஆலோசனைக்கு ராஜபிரியா, மோகனபிரியா, உறுப்பினர் சேர்க்கைக்கு தனலட்சுமி, கீதாலட்சுமி, குடும்ப கட்டுப்பாடு ஆலோசனைக்கு விஜயா, மாலாராஜ், கலைவாணி,  கமிட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக்கு வசந்தாமணி, பிரியா கண்ணப்பன் ஆகியோர் அடங்கிய மருத்துவ வல்லுனர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.