சகோ சிகா சமூக சேவை இயக்கத்தின் 32ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் நிகழ்வு!

மதுரை:சகோ சிகா சமூக சேவை இயக்கத்தின் 32ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி சகோ சிகா சமூக சேவை இயக்கத்தின் நிறுவன தலைவர் எம். சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் மதுரை ,வண்டியூர் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் ஹெச்.சி.எல் பவுண்டேஷனின் அசோசியேட் மேனேஜர் பிரபாகரன் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயபான்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இவ்விழாவிற்கு கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அனிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில்
ஹெச்.சி.எல் பவுண்டேஷனின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர் கற்பகம் மற்றும் பீமா ஆகியோர் ஆரம்ப கல்வி திட்டம் பற்றி விரிவாக பேசினர்.திட்ட மேலாளர் ரூபி அவர்கள் பெண்களு க்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் வழிக்காட்டுதல்கள் குறித்து விரிவாக பேசினார் மற்றும் திட்ட மேலாளர் சக்கரவர்த்தி அவர்கள் மாற்று பாலினத்தவர்களின் எதிர்கால முன்னேற்றம் குறித்து பேசினார்.

மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு வெகுமதி செய்யப்பட்டது.

இவ்விழாவில் அலுவலக ஊழியர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.