வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு  நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி!

வடலூர்:கடலூர் மாவட்டம், வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியில் அமைந்துள்ள வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கான தனி கவனம் உண்டு உறைவிட சிறப்பு பள்ளியில் ஒசூர் அரசு மருத்தவமனை பணியாளரும்,சமூக சேவகரும்,பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான கண்ணகி அவர்கள் தலைமையில் உதவிக்கரம் நீட்டும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் மிக எளிமையாக நடைப்பெற்றது.

இவரது புதல்வரும்,சமூக சேவகருமான நவீன்குமார் அவர் கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் இந்த சிறப்பு பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்று திறன் படைத்த சிறப்பு குழந்தைகளுக்கு அவர்களுக்கு அன்றாட தேவையான மருத்துவ ஸ்கூல் பேக், நோட்டு புத்தகம்,வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ், முககவசம், அரிசி,மளிகைப் பொருட்கள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.

மேலும் இந்த சிறப்பு பள்ளியின் நிறுவனர் வெங்கடேசன் மற்றும் சிறப்பு ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் சமூக சேவகி கண்ணகி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் எங்கள் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் காதர் பாட்ஷா உறுதுணையாக இருந்தார்.