சென்னை :சென்னை அண்ணாநகர் வட்ட வடிவு நகரை சேர்ந்தவர்கள் தங்கபாண்டி மற்றும்
பிரதீபா தம்பதியினர் இவருடையnகுழந்தை
யாஷ்மிகா அவருடைய வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது வெறிப்பிடித்த தெரு நாய் அந்த சிறுமியின் கன்னத்தில் ரத்தம் வரும் கடித்து குதறியது.

இதை கண்டு திகைத்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமணைகு
சென்றபோது நாங்கள் இதையெல்லாம் பார்க்க மாட்டோம் என்று சொல்லி கைவிரித்து விட்டார்கள். அதனால் அவர்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து போன சூழ்நிலையில் தனியார் மருத்துவமனை மருத்துவர் பரிசோதித்து பார்த்து விட்டு இந்த சிறுமிக்கு முகத்தில் அறுவை சிகிச்சை பண்ண வேண்டும் என்று சொன்னதால் மிகவும் வறுமை கோட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் 50000 கடன் வாங்கி. சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் நாங்கள் வசிக்கும் தெருவில் வெறி நாய்கள் அதிகமாக உள்ளது அதனை பிடித்து விட வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
மேலும் அவர்கள் என் குழந்தைக்கு
நடந்ததை போல் வேறு எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
