சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட எழும்பூர் பகுதி 77 வது வட்ட காங்கிரஸார் சார்பில் 74 வது குடியரசு தின விழா மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் டி.எல்.வி தனலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் ஆர். சி .சேகர், எழும்பூர் பகுதி 2வது சர்க்கிள் தலைவர் சி. பி. நரேஷ்குமார், ஜி. ஆனந்தராவ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் டி.எல்.வி. கவியரசன், டி.ஆம்புரோஸ் ஏ.துரை, ஆர் தெய்வானை, ஆர்.வெங்கலம், எம்.கலா, பூங்கா பாபு உள்ளிட்டோர் மற்றும் மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.