.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சதீஷ் குமார் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர்களின் 2 வயது மகள் மித்ரா.. இந்த இளம் வயது சிறுமி முதுகு தண்டுவட தசை நார் சிதைவு கோளாறு (Spinal Muscular Atrophy) என்கிற அறியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ள இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் தேவை படுகிறது.இந்த அறிய வகை நோயினால் அவதிப்ப்பட்டு வரும் சிறுமி மித்ராவிற்காக உலக தமிழர்கள், தன்னார்வலர்கள், திரைதுறையினர் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என பலர் இணைந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
மேலும் மலேசியா நாட்டினை சேர்ந்த ஜொகூர் பாரு மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் ராக்ஸ் ஸ்டார் மீடியா யூடியூப் உரிமையாளர் முனைவர் ராகவி பவன் அவர்கள் இணையத்தின் வழியாக நிதி திரட்டும் நிகழ்வினை நடத்தி RM 6500 – (1,13,435) நன்கொடையாக பெற்று பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வினை சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஜோசப் இளந்தென்றல் மற்றும் கேர் அண்ட் வெல்பர் அமைப்பை சேர்ந்த சிந்து ராம் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர் . மேலும் இந்நிகழ்வில் சமூக பாது காப்பு அமைப்பின் நிர்வாகி கார்த்திக்குமார் கலந்துக் கொண்டார்..
இந்த அறிய வகை நோயினால் அவதிப்பட்டு வரும் சிறுமி மித்ரா மற்றும் குழந்தையை காப்பாற்ற நிதியுதவி வேண்டி பாசப்போராட்டம் நடத்தி வரும் பெற்றோர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சிறுமி மித்ராவின் அறிய வகை நோய் குணமாகி குழந்தை மித்ரா எல்லா குழந்தைகளையும் போல் வலம் வர போதிய நிதியுதவி அளிப்பார்கள் என குழந்தையின் பெற்றோர் நிதியுதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்பில் இருக்கின்றனர்..



