சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனம்,
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை,
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வில் இலங்கை கொழும்பிலிருந்து அரசு தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர்
முனைவர் எஸ்.மோசேஸ் அவர்கள் கலந்து கொண்டு google meet செயலி வழியாகக் இலங்கையில் தமிழ் ஊடகங்களின் வரலாற்று பதிவுகளையும், தற்போதைய ஊடகங்களின் போக்குகளையும் எதார்த்த நிலையில் எடுத்து இயம்பினார்.

மேலும் இந்நிகழ்வில் இந்த ஒரு நாள் கருத்தரங்கத்திற்கு தலைவர்களாக சென்னைப் பல்கலைக்கழக IDE இயக்குநர் பேராசிரியர்.கு.ரவிச்சந்திரன் அவர்களும், அமெரிக்கா
தமிழ்நிலம் அறக்கட்டளையின் செயலாளர் கவிஞர் தாழை.இரா.உதயநேசன் அவர்களும்,
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நிறுவனர் ஆஸ்டின் கில்டஸ் அவர்களும் சுவிட்சர்லாந்து, ஜெனீவா, ஜெனீவா கலை இலக்கியப் பேரவை நிறுவனர்
க. அருந்தவராஜா அவர்களும் அபுதாபி தமிழ்நிலம் அறக்கட்டளையின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
கவிஞர் கீதா ஸ்ரீராம் அவர்களும் தலைமையேற்று நடத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகையின் பேராசிரியர்
முனைவர் கி.சங்கரநாராயணன் அவர்களும். சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை இயக்குனரும், சென்னை திருத்தங்கல் நாடார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியருமான
முனைவர் ஜோ.சம்பத்குமார் அவர்களும் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு செய்தனர்.

இந்நிகழ்வில் உலக நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இதுபோன்ற பல்வேறு தலைப்புகளில் தொடர்ச்சியாக சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளையின் இயக்குநர் முனைவர் ஜோ. சம்பத்குமார் அவர்கள் மேற்கண்ட நிறுவனங்களுடன் இணைந்து மக்களின் வாழ்வியல், செயல்பாடு சார்ந்த பொருண்மையில் பன்னாட்டு அளவில் தமிழ் பணியை அணை வரும் அறியும் நோக்கில் செவ்வனே சிறப்பாக செய்து வருகிறார்.

தமிழ்நிலம் அறக்கட்டளையின் கிளைகளாக அமெரிக்கா, அபுதாபி போன்ற நாடுகளில் உருவாக்கி பல்வேறு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். தமிழ்நிலம் அறக்கட்டளை வளையொலி இணைப்பு உங்கள் பார்வைக்கு: https://youtu.be/82S7hP1swGs

விரைவில் உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் என்னும் தலைப்பில் பாகம் – 2 நிகழ்வு நடக்க இருக்கிறது..

மேலும் விபரங்களுக்கு

தொடர்பு கொள்ளவும்:

99 76 02 57 31.