மயிலாப்பூர் :
ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் ஒழிப்பு முதற்கட்ட துடைப்பம் நிறைவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் நடைப்பெற்றது.
சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சென்று மீண்டும் சென்னையில் முடிவுற்ற துடைப்பம் யாத்திரை முதற்கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசிகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ2500/-
பொங்கல் பரிசாக கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இதே போல் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை வாய்ப்பும், வருமான வாய்ப்பும் இல்லாத இந்த இக்கட்டான நேரத்தில் எல்லா குடும்பங்களுக்கும் முழு ஊரடங்கு காலம் முழுவதும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போதும் கண்டுக்கொள்ளாதவர்.
தற்போது சட்டமன்ற பொது தேர்தல் மிக குறுகிய காலத்தில் நடக்க இருப்பதால் , அதை கவனத்தில் கொண்டு தற்போது பொங்கல் பரிசாக ரூ. 2500/- வழங்க இருப்பது தமிழக மக்களை முற்றிலுமாக ஏமாற்றும் செயல் என்றும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் “லோக் ஆயுக்தா ” சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தொடக்கம் முதலே கேட்டு கொண்ட போதும் கூட, அதை பொருட்படுத்தாமல் . கிடப்பில் போட்டு, அதற்கு செவி சாய்க்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கதக்க செயலாகும் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாநில மகளிரணி
தலைவி ஸ்டெல்லா, மாநிலப் பொருளாளர் சீனிவாசன், மாநில செய்தி தொடர்பாளார் ஹாஜா, கட்சி உறுப்பினர்கள் சோபியா, மங்கை நிஷா, கருணாகரன், எத்திராஜ், தம்பி ராஜ், சுரேந்தர் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர் மதிஒளி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
