சென்னை:
லயன்ஸ் கிளப் ஆப் சென்னை கோரல் சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை எழும்பூரிலுள்ள சென்னை சமூகப்பணி கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில் இதில் 75 ஆசிரியர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்வியாளரும், தொழிலதிபருமான விமலா ராணி பிரிட்டோ மற்றும் பில்ரத் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி சத்யா வி பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் லயன் ராம் அவர்கள் தலைமை தாங்கி தாங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்கள்ஆசிரியர்களுக்கு விருது வழங்கி ஆசிரியர்களை கௌரவித்து அவர்களின் சேவையை பாராட்டுவது எதிர்கால தலைமுறையை உருவாக்குவது கல்விப் பணியை ஊக்குவிப்பதாக அமையும் என்கிற நோக்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதாக அவர்கள் கூறினர். இந்நிகழ்வினை லயன் புஷ்பா அவர்கள் வரவேற்புரையாற்றினார். லயன் மைதிலி கோபிநாத் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் வர்ம மருத்துவத்தில் சிறப்பான சேவையாற்றி வரும் செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலை நகர் பகுதியில் இயங்கி வரும் மாதனின் சித்த வர்மாலயா நிறுவனர் முனைவர் கே. தயாளன் அவர்களுக்கு lions pride awards- 2026 சார்பில் சிறந்த வர்ம ஆசான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
