இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின்(YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி வாகை சூடியவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்வு!

ஈரோடு: இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின்(YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகராஜ் அவர்கள் தலைமையில் ஈரோட்டிலுள்ள ஷவானா கார்டன் அரங்கத்தில் நடைப்பெற்றது.

இதில் தமிழ்நாடு கேரம் சங்கத்தின் இணை செயலாளர் சக்திவேல் மற்றும் தமிழ்நாடு கேரம் பயிற்சியாளர் செல்வ சாரங்கபாணி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார். மேலும் அவர் கேரம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சுழல் கோப்பைகள், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவப்படுத்தினார்.

இந்த போட்டியில்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 11 12, 14, 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 64 கேரம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மேலும் இந்நிகழ்வில் ஜெய்ஹிந்த் நிறுவனத்தின் நிறுவனர் நந்தகுமார், தன்னார்வலர் ஜான் பீட்டர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள்,வீராங் கனைகள், பொக்ராவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான இந்தோ-நேபாள்
கேரம் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.