வியாசர்பாடி: அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி சமூக பணித்துறையின் மாற்றம் மாணவர் பேரவையின் புதிய மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு விழா கல்லூரி அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது.

இதில் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் (ICWO) நிறுவன செயலாளர் ஏ .ஜே.ஹரிஹரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் சமூக பணித்துறையை சேர்ந்த 13 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர்.இவர்களுக்கு ஐசிடபிள்யுஒ மற்றும் அக்சஸ் டு ஜஸ்டிஸ் இணைந்து வாழ்த்துக்களைதெரிவித்துக்கொண்டது.


மேலும் குழந்தை தொழிலாளர்கள்எதிர்ப்பு குறித்து மாணவர்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும்
ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள் குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.


இதில் சமூக பணித்துறையின் துறைத்தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.