சென்னை: ஊரடங்கு உத்தரவு என்பதை நம் உயிர் காக்கும் உத்தரவாகதான் நாம் பார்க்கிறோம், தன்னார்வலர்கள் பல இயற்கை பேரிடர் காலங்களில் தன்னலம் பாராது பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களது தேவையும் அவசியம் அறிந்து, அரசாங்கமும் தன்னார்வலர்களை பல்வேறு பணிகளுக்கு அழைப்பு விடுக்கிறது. பணிகளிலும் ஈடுப்படுத்துகிறது.

பல இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒரு பகுதியாகவே தன்னார்வ பணிகளில் ஈடுபடுவதை மாற்றி கொண்டனர். இத்தகைய ஊரடங்கு காலகட்டத்தில் சில தன்னார்வலர்கள் அரசு இணையதளத்தில் பதிவு செய்தும், சில தன்னார்வலர்கள் அரசு அதிகாரிகளின் அனுமதியோடும் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த செய்தி நேரடியாக மக்கள் தொடர்பில் நற்பணி செய்து வரும் தன்னார்வலர்கள் பலரை வருத்தமடைய செய்துள்ளது.

ஆதலால் சமூக இடைவெளியோடு சில கட்டுப்பாட்டுகளோடு அரசு உத்தரவின் படி நற்பணி செய்ய நாங்கள் ஆவலாக உள்ளோம். சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடும்பத்திற்கு என உதவி வருவோரும் உண்டு, எனவே களபணியாற்ற ஆர்வத்தோடு காத்திருக்கும் தன்னார்வலர்களுக்கு நல்ல செய்தியை விரைவில் தமிழக அரசு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.