சென்னை : உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்களைஉயிர்பலி வாங்கியுள்ள இந்த கொடிய வைரஸ், இந்தியாவிலும் தனது தாக்குதலால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24ம் தேதி முதல் 144 தடை உத்தரவை நாடு முழுவதும் அமுல்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் பலதுறை ஊழியர்கள் என தொடர்ந்து பணியாற்றி வருவதை பாராட்டும் , அதே வேளையில் 144 தடை உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாடு முழுவதும் காவல்துறையினர் இரவு பகல் பாராது பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக 144 தடை உத்தரவை அமல் படுத்தும் பணியில் காவல்துறையினர் திறம்பட செயல்படுத்தி வருகின்றனர். உண்ண சரியான உணவு கிடைக்காமல் , கடும் வெயிலிலும் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக தங்களது வீடுகளுக்கு கூட செல்லாமல் காவல்துறையினர் ரோந்து பணிகளையும் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் . தங்களது குடும்ப உறுப்பினர்களையும் கூட பார்க்காமல் தமிழக மக்களை காக்கும் வகையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் தமிழக காவல் துறையினரை கௌரவிக்கும் வகையில் அரசு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்தார்….