தாய்ப்பால் – ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை வலியுறுத்தும் நோக்கத்தோடு உலக தாய்ப்பால் வாரத்தை குறிக்கும் விதமாக VMET CME என்கிற நிகழ்வு விஜயா ஹெல்த் சென்டரிலுள்ள என்.ஆர்.ஐ மெட் ஆடிட்டோரியத்தில் நடைப்பெற்றது.

சென்னை:கடந்த ஆண்டு (2022) பொன்விழா கொண்டாடிய விஜயா மருத்துவமனை,
திரு B நாகிரெட்டி, அவர்களால் 1972ல் ‘ஆரோக்கியமான சமுதாயத்திற்கான தன்னலமற்ற சேவை’ என்ற பார்வையுடன் நிறுவப்பட்டது.
2003 இல் தொடங்கப்பட்ட உலகளாவிய முன்முயற்சியின் உயர் தரத்தை பூர்த்தி செய்து அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பதை ஆதரித்து ‘ குழந்தை நட்பு மருத்துவமனை” சான்று பெற்றது ( WHO , UNICEF)
மார்ச் 2014 இல், விஜயா மருத்துவமனை தென்னிந்தியாவின் முதல் ” தாய் பால் வங்கி”யை தொடங்கியது. ( ஹியூமன் மில்க் பேங்க் )
பிறந்த குழந்தை பிரிவுகளில் குறைப்பிரசவ மற்றும் நோய்வாய்ப்பட்ட தீவிர சிகிச்சை தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் அவசியமாகிறது
VMET நிர்வாக அறங்காவலர் & CEO, ஸ்ரீமதி பாரதி ரெட்டி தளராத ஆர்வம் மற்றும் விடாமுயற்சி வழிகாட்டுதலின் கீழ், பச்சிளம் குழந்தை நலனுக்காக “தாய் பால் – குழந்தையின் உரிமை “ கருத்தரங்கு நடைபெற்றது. தாய் பால் குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து; குழந்தைகளுக்கான ஓர் தன்னிகரற்ற உணவும் கூட என எடுத்துரைத்தார்.

இதனை டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் குத்து விளக்கு ஏற்றி திறந்து “தாய்ப்பால் என்பது தாய்க்கும் சேய்க்குமான ஒரு உறவுப்பாலம் என்றே சொல்லலாம்” என்று கூறினார்
உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாய்ப்பாலின் முக்கியத்துவம், உன்னதம் குறித்து எடுத்துரைக்கும் வகையிலும் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரத்தை கடைப்பிடிக்கிறது.
“தாய் பால் பால் வங்கியை எவ்வாறு ஒரு மருத்துவமனையில் அமைப்பது” என்பது குறித்து வழிகாட்டுதல்கள் கருத்தரங்கில் அளிக்கப்பட்டது.
“தாய் பால் , ஒவ்வொரு குழந்தயின் உரிமை , அதனை எப்படி செயல்படுத்துவது ” என்பது இந்த கருத்தரங்கின் ஒரு முக்கிய அம்சமாகும்.

விஜயா மருத்துவமனைகள் பற்றி:
1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட விஜயா மருத்துவமனை சமூகத்திற்கு தரமான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. அறக்கட்டளையை உருவாக்கியவர் திரு. பி. நாகி ரெட்டி, தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றவரும், நாட்டின் மிகவும் புகழ்பெற்ற திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான விஜயா வௌஹினி ஸ்டுடியோவின் நிறுவனர்.
விஜயா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மையான மருத்துவமனையானது இருதயவியல், பொது அறுவை சிகிச்சை, ENT, காஸ்ட்ரோஎன்டாலஜி, உள் மருத்துவம், நுரையீரல், சிறுநீரகம், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், கண் மருத்துவம், சிறுநீரகம், பிசியோதெரபி, நரம்பியல் மற்றும் பல சிறப்பு நிலை பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.
விஜயா மருத்துவமனை 750 படுக்கைகள் மற்றும் 9 அறுவை சிகிச்சை அரங்குகளைக் கொண்டுள்ளது. அனைத்து சமீபத்திய மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்புச் சேவைகள் மருத்துவப் பராமரிப்பில் சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் மருத்துவமனை DNB திட்டங்களை நடத்த தேசிய தேர்வு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. VMET பட்டதாரி பயிற்சி மையங்களாக வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, விஜயா ஹார்ட் ஃபவுண்டேஷன், 15,000 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளைச் செய்து, இந்தியாவில் இதய அறுவை சிகிச்சைகளில் முன்னணி மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி துறை 40,000 க்கும் மேற்பட்ட கரோனரி ஆஞ்சியோகிராம்களையும் சுமார் 7500 கரோனரி தலையீடுகளையும் வெற்றிகரமாகச் செய்துள்ளது.
50+ வருட அனுபவம்

  • 176+ இதய மாற்று அறுவை சிகிச்சை
  • 100+ விருதுகள்
  • 100K மகிழ்ச்சியான நோயாளிகள்
    சென்னையில் உள்ள சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
  • 50 வருட நம்பிக்கை மற்றும் சேவை வழங்கல்
  • NABH அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை
  • சர்வதேச தரநிலை கண்ணாடி ஆபரேஷன் தியேட்டர்
  • அதிக அனுபவம் வாய்ந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் & ஆலோசகர்கள் குழு
  • 24×7 அவசர சேவைகள்
    எங்கள் அலகுகள்
  • விஜயா மருத்துவமனை
  • விஜயா இதய அறக்கட்டளை
  • விஜயா ஹெல்த் சென்டர்
  • விஜயா எஜுகேஷனல் அகாடமி
  • விஜயா கண் அறக்கட்டளை
  • விஜயா மருத்துவ சுற்றுலா
  • விஜயா மாற்று அறுவை சிகிச்சை – மையம்