முதுபெரும் கம்யூனிஸ்ட் பேரியியக்கத்தலைவர் சங்கரய்யா அவர்கள் மறைவு:ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தலைவர் வசீகரன் அவர்கள் இரங்கல் செய்தி லை!
சென்னை:கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவர் திரு சங்கரய்யா அவர்கள் இந்திய மக்களின் மேன்மைக்காக பல அடக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், சாதி வர்க்கம் இவைகளை எதிர்த்துப் போராடியவர்,
திரு.சங்கரய்யா அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் முகம் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளம் மற்றும் வரலாறாகவேஎ திகழ்ந்தவர்.
எட்டு ஆண்டு கால சிறைவாசம், மூன்றாண்டு கால மறைமுக வாழ்க்கை,
இந்திய சுதந்திர நாளுக்கு முதல் நாள் (1947 ஆகஸ்ட் 14) சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றவர்.
தன் கல்லூரி படிப்பைத் துறந்து நாட்டு சுதந்திரதிற்காக சிறைச்சென்றவர்.
வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தவர்,
அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மட்டுமல்ல,அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும் பாட்டாளி வர்க்கத்துக்கு இழப்பாகும்!
இந்த மாபெரும் மனிதருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள்,அவரை மேன்மைப்படுத்தும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிட முன் வந்தது பாராட்டுக்குரியது,
அதை கண்ணியம் அறியாத, தெரியாத தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி அவர்கள் லதிரு.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதை தடுத்திருப்பதும் தாமதித்ததும் மிகவும் கண்டனத்துக்குரியது.
மறைந்த தியாகியும், மக்கள் போராளியும்,கண்ணியமிக்க திரு.சங்கரய்யா அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ஆழ்ந்த வருத்துடன் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என வசீகரன் அவர்கள் தெரிவித்தார்.
