திருவள்ளூர்:
தை திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் பொருட்டு, திருவள்ளுர் மாவட்டம்,வேப்பம்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாகநடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விஜய் டிவி கலக்கப்போவது யாரு சீசன் 10 போட்டியாளரான மோசஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ ராம் பொறியியல் அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து சிறப்பாக செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியானது சிறப்பு விருந்தினரின் குத்துவிளக்கு ஏற்றலுடன் இனிதே துவங்கியது.

மேலும் இவ்விழாவிற்கு ஸ்ரீராம் பொறியியல் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மற்றும் வளாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மெக்கானிக்கல் துறை தலைவர் முனைவர் ஜி. சுகன்யா அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் வளாக இயக்குனர் ஆகியோர் இணைந்து மோசஸ் அவர்களுக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசு அளித்தும் கௌரவித்தனர்.

விஜய் டிவி கலக்கப்போவது யாரு சீசன் 10 போட்டியாளரான மோசஸ் அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி ஒரு சிறிய விளக்கக் காட்சி காண்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து பேசிய மோசஸ் அவர்கள் தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் முழு முதல் காரணம் என்று உரைத்தார். மேலும் மாணவர்களும் தங்களின் வாழ்க்கையில் இதேபோன்று தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், கொண்டு செயல்பட வேண்டும் என்று ஊக்கம் தரும் வகையில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மாணவர்கள் மத்தியில் பல குரல் பேசியும் , மாணவர்களுடன் நடனமாடியும் பொங்கல் விழாவினை சிறப்பித்தார். இந்த சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தில், பாரம்பரிய போட்டிகளான உறியடித்தல், பொங்கல் வைக்கும் போட்டி, ரங்கோலி, சாக்கு போட்டி, கயிறு இழுத்தல் என பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு, பரிசினை பெற்றனர். இந்நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்த அனுமதி அளித்த ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் கல்வி முதல்வருக்கும், பேராசிரியர், கல்லூரி வளாக இயக்குனர், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்
என அனைவருக்கும் நன்றி தெரிவித்து தேசிய கீதத்துடன் இனிதே நிறைவடைந்தது.