நுங்கம்பாக்கம் :தமிழக வாகன ஒட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் 12-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவிலுள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வு சங்கத்தின் நிறுவனத் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் துணைத் தலைவர் மாதேஷ்வரன், செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த துவக்க விழாவில் தமிழக வாகன ஒட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் இரண்டு மாவட்ட தலைவர்கள், மாநில துணைச் செயலாளர், பகுதி செயலாளர்,செயற்குழு உறுப்பினர் மற்றும் சட்ட ஆலோசகர் உள்ளிட்ட நிர்வாகிகள் புதியதாக பதவி யேற்றுக் கொண்டனர். சங்க நிர்வாகிகள் மற்றும் புதியதாக பதவி ஏற்றுக் கொண்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் இந்த துவக்க விழா நிகழ்வில் சங்க செயற்குழு உறுப்பினர்களான செந்தில் அருள்,ரவிக்குமார் ,துரை ராஜ், ஹரி, சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
இறுதி சங்க துவக்க விழாவை கொண்டாடும் விதமாக சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் புதிய நிர்வாகிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்…