சென்னை :
சிவசேனா தலைவர் உத்தவ் பாலா சாகிப் தாக்கரே அவர்களுடைய பிறந்த தினம் அவர் சிவசேனா தலைவர் மட்டுமல்ல மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டு கொண்டிருக்கிறார். தமிழக சிவசேனா சார்பில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சிவசேனா நிர்வாகிகள் பல நலத்திட்ட உதவிகள் முக கவசம், கபசுர குடிநீர், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் ஒரு நிலையான ஆட்சி அமையும் என்று சொல்லி யாருமே கடந்த நவம்பர் மாதத்தில் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்லாம் சொன்னார்கள் இங்கே உத்தவ் தாக்கரே அவர்கள் முதலமைச்சர் பதவியை ஒருநாளும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி
ராம ஜென்ம பூமி ராமருடைய கோயில் மிகப்பெரிய பிரம்மாண்டமாக உருவாக்கப்படுகிறது ராம ஜென்மபூமி டிரஸ்ட் உத்தவ் தாக்கரே அவர்களை. அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
இதற்கு காரணம் என்று சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவினுடைய ஹிந்துத்துவத்தின் அடையாளம் பாலா சாஹிப் தாக்கரேதான்.இவ்வாறு மாநிலத் தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன் கூறினார் மாநில துணைத்தலைவர் தயாநிதி, மாநில ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி சேதுபதி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் தக்ஷிணாமூர்த்தி, மண்டலத்தின் தலைவர் சிவபிரபு ஆகியோர் உடனிருந்தனர்.