இந்தோ-நேபாளம் சர்வதேச அளவிலான கேரம் விளையாட்டுப்போட்டியில் 44 தங்க பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த தமிழ்நாடு வீரர்கள்!
சென்னை:இந்தோ-நேபாளம் இடையேயான சர்வதேச அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி கடந்த 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நேபாளம் பொக்காராவில் உள்ள ரங்கசாலா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நமது இந்தியா சார்பாக தமிழ்நாட்டை சேர்ந்த கேரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளான
8 வயது முதல் 12, 14, 17, 19 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள்
பங்கேற்று ஒட்டு மொத்தமாக 44 தங்க பதக்கங்களையும் வென்று வரலாறு காணாத சாதனை படைத்து நமது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் மாபெரும் வெற்றிக்கு உற்ற துணையாக இருந்த தேசிய கேரம் சாம்பியனும்,கேரம் பயிற்சியாளருமான சக்திவேல் அவர்களுக்கும், தங்க பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கேரம் சங்க நிர்வாகிகள்,கேரம் வீரர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.