சென்னை :நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் செயல்களில் இரவும் பகலுமாக ,அர்ப்பணிப்பு உணர்வுடன் சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் இரவு பகல் பாரமல் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். . இந்த இக்கட்டான நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் அரசு துறை அனைத்து ஊழியர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தமிழகத்திலும் 144 தடை உத்தரவை கடுமையாக தமிழக அரசு பின்பற்றி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடைகள், மருந்துகடை மட்டும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகளும் வரும் 14-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

மதுபானம் கிடைக்காமல் சிலர் மதுப்பழக்கத்தை மறந்து வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் கள்ளசாராய கலச்சாரம் தலை துக்க ஆரம்பித்துள்ளது. தேனி, திருச்சி, சேலம், கள்ளகுறிச்சி, கடலூர், திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களில் கள்ளசாராயம் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. இதனால் கள்ளசாராய உயிரிழப்பு ஏற்படும் அபாயத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கள்ளசாராய கலாச்சாரத்தை அரசு பல்வேறு நடவடிக்கையின் மூலம் ஒழித்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், இதனை சில சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டு கள்ளசாராயத்தை தயாரித்து விற்பனை செய்யும் படுபாதக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுப்பழக்கத்தை மறக்க நினைக்கும் சிலரும் கள்ள சாராயத்திற்கு இறையாகி விடுகின்றனர்.

ஆகவே கள்ளசாராயத்தை தயாரிக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து, தமிழகத்தில் மீண்டும் தலைதுக்கும் கள்ளச்சாராய கலாச்சாரத்தை அரசு இரும்பு கரம் ஒடுக்க வேண்டுமென தமிழக முஸ்லிம் லீக் சார்பில் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.