சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை,
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை, சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனம்,
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை சார்பில் இணையவழி எட்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 21 ஜூன் 2021 முதல் 28 ஜூன் 2021 வரை உலக நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் என்னும் பொருண்மையில்
நடைபெற உள்ளது.

இதில் எட்டு நாடுகளிலிருந்து
பொழிவாளர்கள் பேசவுள்ளனர். அதாவது 21.06.2021 அன்று அமெரிக்காவிலிருந்து கவிஞர் தாழை.இரா.உதயநேசன் அவர்களும், 22.06.2021 அன்று அபுதாபியிலிருந்து சிவமணி நடராஜன் அவர்களும். 23.06.2021 அன்றுமலேசியாவிலிருந்து தேவி ராமசாமி அவர்களும்,24.06.2021 அன்று பிரான்ஸிலிருந்து பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்களும்,25.06.2021 அன்று ஆஸ்திரேலியாவிலிருந்து முனைவர்.சந்திரிகா சுப்ரமண்யன் அவர்களும், 26.06.2021 அன்று அயர்லாந்திலிருந்து தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு அவர்களும்,27.06.2021 அன்று இலங்கையிலிருந்து முனைவர் முருகு தயாநிதி அவர்களும்,
28.06.2021 அன்று சிங்கப்பூரிலிருந்து கவிஞர் இராமநாதன் அவர்களும் கலந்து கொண்டு google meet செயலி வழியாகக் உரையாற்ற உள்ளனர்.

இந்த இணையவழி கருத்தரங்கத் தலைவர்களாக சென்னைப் பல்கலைக்கழக IDE இயக்குநர் பேரா.கு.ரவிச்சந்திரன் அவர்களும், அமெரிக்கா
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நிறுவனர் ஆஸ்டின் கில்டஸ் அவர்களும் சுவிட்சர்லாந்து,ஜெனிவா, ஜெனீவா கலை இலக்கியப் பேரவை நிறுவனர்
க.அருந்தவராஜா அவர்களும் அபுதாபி, தமிழ்நிலம் அறக்கட்டளை,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
கவிஞர் கீதா ஸ்ரீராம் அவர்களும், தலைமை ஏற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகையின் பேராசிரியர்
முனைவர் கி.சங்கர நாராயணன் அவர்களும் தமிழ்நிலம் அறக்கட்டளை, இயக்குநர், திருத்தங்கல் நாடார் கல்லூரி, தமிழ்த்துறையின் பேராசிரியர்
முனைவர் ஜோ.சம்பத்குமார் அவர்களும் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளனர். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர்….

மேலும் தொடர்புக்கு:

தமிழ் நிலம் அறக்கட்டளை

பேராசிரியர் முனைவர். ஜோ.சம்பத்குமார்

செல் : 0091 99760 25731